'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப...
காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை குறைந்த நிலையில் தற்போது ரூ.480 உயர்ந்துள்ளது.
அதன்படி தங்கம் கிராமிற்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,900க்கும் ஒரு சவரன் ரூ.87,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 880 குறைந்து ஒரு கிராம் ரூ. 10,840 -க்கும், ஒரு சவரன் ரூ. 86,720 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை முதல் முறையாக சவரன் ரூ.85,000-ஐ கடந்து விற்பனையானது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.86,160-க்கு விற்பனையானது.
அவிநாசி: பட்டா வழங்கிய இடத்தில் உரிய அளவீடு செய்து தரக் கோரி போராட்டம்
அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது. புதன்கிழமையும் இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 87,600 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று(அக். 2) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்த நிலையில், மாலை மீண்டும் சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. ரூ. 87,600 -க்கு விற்பனையானது.