அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
கரூா் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பாஜக கவுன்சிலர் முறையீடு!
கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வை அணுகுமாறு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அடங்கி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் கரூரில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கரூா் தவெக கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட தமிழக அரசும், காவல் துறையும்தான் காரணம் எனவும், பிரசாரத்துக்கு விஜய் தாமதமாக வந்ததுதான் காரணம் எனவும் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ‘கரூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என முறையிட்ட வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அடங்கி அமர்வு, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Karur affair BJP councilor appeals for CBI probe