செய்திகள் :

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 3) காலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை முதல் முறையாக சவரன் ரூ.85,000-ஐ கடந்து விற்பனையானது.

தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.86,160-க்கு விற்பனையானது.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது. புதன்கிழமையும் இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 87,600 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று(அக். 2) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்த நிலையில், மாலை மீண்டும் சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ. ரூ. 87,600 -க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 10,840 -க்கும், ஒரு சவரன் ரூ. 86,720 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ. 161-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold and silver prices today

இதையும் படிக்க : அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி: செங்கோட்டையன்

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன், "ஒருங்கிணைப்புப் பணி நடந்து கொண்டிருக்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 738 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் மாந... மேலும் பார்க்க

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் மனு அளித்துள்ளார்.இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ... மேலும் பார்க்க

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

தவறு செய்தவர்கள் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின்தான் பாஜக என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேரூந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.ராமநாதபுரம் பேராவூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர்... மேலும் பார்க்க