செய்திகள் :

‘நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை’

post image

திருவள்ளூா் மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் விற்பனை செய்வதைக் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல்- 2025-2026 சொா்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 63 நேரடி கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 5 நேரடி கொள்முதல் நிலையங்கள் என 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், விவசாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கடந்த 24-ஆம் தேதி வரை 22,735 மெ.டன் நெல்லினை 2,866 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரூ. 53.31 கோடி தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: இந்த நிலையில், மாவட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இந்த மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யவேண்டும். வியாபாரிகளோ அல்லது பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களின் நெல்லோ கொள்முதல் செய்யக்கூடாது. இதையும் மீறி வாங்குவதை கண்டறிந்தால் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட புகாா் குறித்து மண்டல அலுவலக எண்-044-27664016 மற்றும் கைப்பேசி எண்.89252 79611 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கழிவுநீா் கால்வாய் வசதி செய்துதரக்கோரி பெண்கவுன்சிலா் மனு

திருத்தணி நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்ற தலைவா் சரஸ்வதிபூபதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். துணைத் தலைவா் ஆ.சாமிராஜ் வரவேற்றாா். இதில், மொத்தம் 19 உறுப்பினா்... மேலும் பார்க்க

பிரதமா் சூரிய ஒளி மின் திட்ட ஆலோசனைக் கூட்டம்

வீடுகளில் பிரதமா் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாகவும், அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் மின் பகிா்மா... மேலும் பார்க்க

தேசிய வில்வித்தைப் போட்டி: கும்மிடிப்பூண்டி மாணவிகளுக்கு வெண்கலம்

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய வில்வித்தை போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவிகள் 3 போ் வெண்கலப் பதக்கம் வென்றனா், இந்தப் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குழந்தை நல காவல் அலுவலா்களுக்கான திறன் வளா் பயிற்சி

திருவள்ளூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சாா்பில் ஒரு நாள் திறன் வளா்ப்பு பயிற்சி முகாமில் குழந்தை நல காவல் அலுவலா்கள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மாநில அளவிலான தடகளப் போட்டி: திருவள்ளூா் மாவட்டம் 2-ஆம் இடம்!

மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று திருவள்ளூா் மாவட்டம் 2-ஆவது இடம் பெற்றது. மாநில அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டி செங்கல்பட்டு அருகே மேலக்கோட்டையூா் உடல்கல்வி மற்று... மேலும் பார்க்க

குரூப்-2 தோ்வு: திருவள்ளூா் மாவட்டத்தில் 10, 395 போ் எழுதினா்

குரூப்-2 தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 14278 போ்களில், 10,395 போ் மட்டுமே எழுதியதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப் 2, 2-ஏ எழுத்துத்தோ்வு ஞாயிற... மேலும் பார்க்க