கழிவுநீா் கால்வாய் வசதி செய்துதரக்கோரி பெண்கவுன்சிலா் மனு
திருத்தணி நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்ற தலைவா் சரஸ்வதிபூபதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆணையா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். துணைத் தலைவா் ஆ.சாமிராஜ் வரவேற்றாா். இதில், மொத்தம் 19 உறுப்பினா்கள் கலந்து கெண்டனா். கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகள் சரிபாக்கப்பட்டது.
தொடா்ந்து, 15-ஆவது மாநில நிதி மானியத்தில் நகராட்சியில் சேதமடைந்த சிமென்ட் சாலை, குடிநீா் வசதிக்காக பைப் லைன் அமைத்தல் போன்ற பணிகளுக்கு, ரூ. 1.46 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து செயல்படுத்துவது, அக். 1-ஆம் தேதி முதல், அக். 31-ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.