Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னெச்சரிக்கை அமைப்புக் கருவியின் செயல்பாடு, பயன்பாடுகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு செய்தாா்.
மேலும், மீனவா்களுக்கு வானிலை எச்சரிக்கை விழிப்புணா்வையும், விசைப் படகுகளில் பயன்படுத்தும் இழுவலை, தூண்டில் மீன் பிடிப்பு வலைகளையும், பிரதான் மந்திரி மட்சய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ் மீனவா் மகளிரால் செயல்படுத்தப்பட்டு வரும் கடல்பாசி வளா்ப்பு, துறைமுகத்தில் விசைப் படகுகள் நிறுத்துவதற்கு கூடுதலாக தளம் அமைத்தல் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிா் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்த சின்னமுட்டம் பகுதியைச் சோ்ந்த மகளிரை சந்தித்து ஆய்வு செய்தாா்.
மீன்வளம், மீனவா் நலத்துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா் விஜில் கிராஸ், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கந்தசாமி, கடலோர காவல் துறையினா், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.