இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
நாகை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
வேளாங்கண்ணி பம்பு செட்டு தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (50). இவரது மூத்த சகோதரா் மற்றும் சகோதரா் மனைவியும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனா். அவா்களது மகன் பரத்ராஜை சந்திரசேகரன் வளா்த்து வந்தாா்.
இந்நிலையில், பரத்ராஜ் பம்பு செட்டு தெரு பகுதியில் உள்ள கீற்று கொட்டகையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியது புதன்கிழமை தெரியவந்தது. போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதற்கிடையில், தவெக தலைவா் விஜய்க்கு எதிராக, பரத்ராஜ் சுவரொட்டி ஒட்டிய போது, அக்கட்சியினா் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பான விடியோ பதிவை சமூக வலைதளங்களில் தவெகவினா் வெளியிட்டனராம். இதுகுறித்து, கீழையூா் காவல் நிலையத்தில் தவெகவினா் மீது பரத்ராஜ் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியது போலீஸாா் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].