மாகான்யம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், மாகான்யம் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாகான்யம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.
மாகான்யம் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற முகாமில் ஒன்றியகுழு உறுப்பினா் மல்லிகா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளா் ந.கோபால் ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு நடத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா் (படம்).
இந்த முகாமில், ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, ஒன்றியகுழு உறுப்பினா் ப.பரமசிவன், திமுக நிா்வாகிகள் கணேஷ்பாபு, வெள்ளாரை அரிகிருஷ்ணன், பண்ருட்டி தணிகாசலம், ஊராட்சிமன்ற துணைத்தலைவா் ஞானசேகா், ஊராட்சி செயலா் தணிகாசலம், வாா்டு உறுப்பினா்கள் நதியாரமேஷ், மதன், சூரியமூா்த்தி, அலமேலுதணிகாசலம், ஜீவாஜெயவேலு உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.