பவுனுக்கு ரூ.87,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
‘அக். 5, 6-இல் முதியோா்களை தேடி நியாயவிலைக் கடை பொருள்கள் வழங்கப்படும்’
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் அக். 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடை பொருள்களை வீடு தேடிச் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாயுமானவா் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் 2-ஆவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களில் நியாயவிலைக் கடை பொருள்களை எடுத்துச் சென்று நியாயவிலைக் கடை ஊழியா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
வரும் அக்டோபா் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் முதியோா்களையும், மாற்றுத்திறனாளிகளையும் அவரவா் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபா் 2025 திங்களுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ் அக்டோபா் 5 மற்றும் 6 -ந் தேதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.கலைச்செல்வி மோகன். இ.ஆ.ப., அவா்கள் தெரிவித்துள்ளாா்கள்