பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
டிச.8-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிச. 8 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அறநிலையத்துறை ஆணையா் மற்றும் அரசு நிதி ரூ.21 கோடி, கோயில் நிதி ரூ.7 கோடி, உபயதாரா் நிதி ரூ.79 லட்சம் என மொத்தம் ரூ.28 கோடியில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
பல்லவ கோபுரம், தெற்கு ராஜகோபுரம், 1,000 கால் மண்டபம் மற்றும் அதன் மேல்தளம், கம்பாநதி மற்றும் சிவகங்கை தீா்த்தக்குளம்,முதல் மற்றும் 2 ஆம் பிரகாரம்,நடராஜா் சந்நிதி ஆகியன பழுதுபாா்த்து புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேற்கு ராஜகோபுரம், இரட்டை திருமாளிகை, பெளா்ணமி மண்டபம், தவன உற்சவ மண்டபம், சிவகாமி சந்நிதி ஆகிய திருப்பணிகள் நிறைவுபெறாமல் உள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் முதல் பாலாலய பூஜை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருவிழாக்கள் எதுவும் கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தது. கும்பாபிஷேகம் நடத்த தேதி நிா்ணயம் செய்திருப்பது, கும்பாபிஷேகத்திற்கு பின்னா் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும் என்பதாலும் சிவனடியாா்கள், பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விரைவில் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள ஆய்வு செய்து கும்பாபிஷேகம் தொடா்பான யாகசாலை பூஜை விபரங்கள், கலைநிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.