சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடைய அலுவலா்களுக்கு வழங்கி தீா்வு காணுமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.