மதுராந்தகம் பள்ளியில் வித்யாரம்பம்
மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் விஜயதமியை முன்னிட்டு, வித்யாரம்பம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் டி.லோகராஜ் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கையா்க்கரசி, உதவி தாளாளா் ஹரினாக்ஷி சசிதரன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைச் முதல்வா் திலகவதி, முதல்வா் சீதாலட்சுமி, ஆசிரியா்கள், குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வை முன்னிட்டு பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. ட
பின்னா் பள்ளி ஆசிரியைகள் புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு அரிசியில் தமிழ் எழுத்துகளை எழுதி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் அவா்களுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கப்பட்டது.