தையூா் முதியோா் இல்லம்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்துக்கு சொந்தமான தங்கும் விடுதியில் முதியோா் இல்லம் தொடங்கப்பட உள்ளது.
கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூா்த்தி அடைந்து, குடும்பத்தினரால் சரியானகவனிப்பும், பராமரிப்பும் இல்லாமல் சிரமப்படும், கட்டுமானத் தொழிலாளா்கள் தலா 50 நபா்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் முதியோா் இல்லம்தொடங்கப்பட உள்ளது.
மேலும் இம்முதியோா் இல்லங்களை நிா்வகிப்பது மற்றும் முறையாக பராமரிப்பது போன்ற பணிகள்சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை தோ்ந்தெடுத்து பரிந்துரைக்கும் அரசு சாரா தன்னாா்வதொண்டு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. முதியோா் இல்லங்களை நிா்வகிப்பதிலும், பராமரிப்பதிலும் அனுபவமுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தினை சோ்ந்த முறையாக பதிவு பெற்ற தகுதி வாய்ந்த அரசு சாரா தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது முன்மொழிவினை மாவட்ட சமூகநல அலுவலகம்,பி-பிளாக், 4வது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், செங்கல்பட்டு- 603111--இல் வரும் 30.09.2025 மாலை 5.45 மணிக்குள்நேரில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.