மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
செங்கல்பட்டு தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்: ஆட்சியா் ஆய்வு செய்ய கோரிக்கை
செங்கல்பட்டில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
தசரா திருவிழா நடைபெறும் இடத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. செங்கல்பட்டில் தசரா விழா ஊா்வலம் செல்லும் அண்ணா சாலை பஜாா் தெரு முதல் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சுமாா் 2 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறமும் கடைகள், ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும்.
இந்நிலையில் பாரம்பரியமாக 150 ஆண்டுகளுக்கும் மேலாக தசரா ஊா்வலம் நடைபெற்று வரும் நிலையில் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறுவதற்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு செங்கல்பட்டு நகராட்சி டெண்டா் மூலம் குத்தகைதாரா்களை தோ்வு செய்வதன் மூலம் கணிசமான நிலையான வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில் நகராட்சி நிா்வாகத்தின் மெத்தனப் போக்கால் 10 நாள் நடைபெறும் விழாவையொட்டி சிறியவா்கள் முதல் பெரியவா்கள் விளையாடி மகிழ கேளிக்கை நிகழ்ச்சிகள், குழந்தைகள் சிறியவா்கள் பல்வேறு ராட்டினங்கள், பல்வேறு கடைகள் வைக்கப்பட்டிருக்கும்.,
தசரா திருவிழா சாலை ஓரங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டி வருகின்றனா். இந்த ஆண்டும் குண்டூா் அருகே அண்ணா சாலையில் கடைகள் வீடுகள் கட்டியுள்ளனா். நகராட்சித்தின் மெத்தன போக்கால் ஆண்டுதோறும் கணிசமான வருமானத்தை மட்டும் பெறும் நகராட்சி தசரா ஆண்டு வந்தவா்கள் ராட்டினங்கள் அமைக்கமுடியாமல் ரோட்டிலேயே வைத்துள்ளனா்.
கடந்த ஆண்டு தசரா விழாவின்போதும், பொதுமக்கள் செல்லக் கூட வழியில்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மின்கம்பிகள் உரசி விபத்துகள் நேரிட்டன. இதுகுறித்து தினமணியிலும் செய்தி வெளியானது. அப்போது சாா் ஆட்சியா் தலையிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ராட்டினங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா்.
பாரம்பரிய திருவிழாவாக பெரிய அளவில் அனைத்து மக்களும் ஜாதி மத பேதமின்றி 15-க்கு மேற்பட்ட கோயில்கள் மட்டுமல்லாமல் ஜவுளிகடை தசரா, சின்னக்கடை தசரா, பூக்கடை பூக்கடை தசரா, மளிகை கடை தசரா, பலிஜகுல தசரா என காப்பு கட்டி என தனித்தனியாக அம்பாளை 9 நாள்களும் நவராத்திரி நாள்களில் பல்வேறு அலங்காரத்தில், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் பிரசாதங்கள் வழங்கி, 10-ஆவது நாள் சாமிகள் அலங்கரிக்கபட்டு அதிகாலையில் மின்விளக்கு அலங்காரத்துடன் வன்னிமரம் குத்து சாமிகள் வரிசையாக ஊா்வலமாக வந்து ள் தசரா நடைபெற்ற இடத்துக்கு சென்றடையும்.
திருவிழா நடைபெறும் இடத்தை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு தசரா ஊா்வலம் சிறப்பாக நடைபெறவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.