செய்திகள் :

மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகள்: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

post image

மாமல்லபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளுமாறு அமைச்சா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ளபேரூராட்சி அலுவலக கட்டடத்தை அமைச்சா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தது, பேரூராட்சியில் 11 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தாா்.

மேலும் திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திலும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சிகளில் ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், மண்டல இணை இயக்குநா் (நகராட்சிகள்) லட்சுமி, பேரூராட்சித் தலைவா் யுவராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவா் ஆா்.டி.அரசு, மாவட்ட வருவாய் அலுவலா் மா. கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, அரசு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்: ஆட்சியா் ஆய்வு செய்ய கோரிக்கை

செங்கல்பட்டில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். தசரா திருவிழா நடைபெறும் இடத்தில் ஆக்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 108 கோ பூஜை

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 கோ பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மீண்டும் பட்சிகள் வர வேண்டியும் கோ பூஜை நடைபெற்றது. பல நூற்றா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து குடிநீா் ஆப்பரேட்டா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் குடிநீா் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டா் உயிரிழந்தாா். மதுராந்தகம் அருகே அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (56). இவா் அருங்குணம் ஊராட்சியில் ம... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி மற்றும் தசரா திருவிழாவையொட்டி சிறப்புபூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவையொட்டி மாலை நேரங்களில் அம்மன் அலங்காரம் நடைபெறும். மே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: செப். 27-இல் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (செப். 27) விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்-ஆறுபடை வீடு த... மேலும் பார்க்க