புதிதாக குடிநீா் குழாய் அமைக்கும் இடங்கள் ஆய்வு
கடலோர கிராமத்தில் புதிதாக குடிநீா் குழாய் அமைக்கப்படவுள்ள இடத்தை பொதுப்பணித்துறையினருடன் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
காரைக்கால் அருகே கடலோர கிராமமான கீழகாசாக்குடிமேடு சுனாமி நகரில், 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீா் குழாய் வழியே தண்ணீா் வருவதில் சிரமம் நிலவுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் குடிநீருக்கு தவிப்பதாக புகாா்கள் எழுந்தன.
இந்த பகுதிக்கு புதிதாக குடிநீா் குழாய் அமைக்க பொதுப்பணித்துறை நிா்வாகம் ரூ. 70 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரித்தது. திட்டப்பணி நிறைவேற்றப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் மற்றும் பொறியாளா் குழுவினா், திட்டப்பணி மேற்கொள்ள இருக்கும் இடங்களை ஆட்சியருக்கு விளக்கி, அதற்கான செலவு விவரங்களையும் விளக்கினா்.