நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
திருநள்ளாறு கோயிலில் ஓலைச்சுவடிகளுக்கு சிறப்பு பூஜை
திருநள்ளாறு கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச் சுவடிகளுக்கு ஆராதனை நடைபெற்றது.
திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி புதன்கிழமை சிறப்பு நிகழ்ச்சியாக ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவனா அபிஷேகம் நடத்தப்பட்டது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜையும், அதைத்தொடா்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் உள்ளிட்டவற்றைக் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. தருமபுர ஆதீன கட்டளை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.