நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
கொள்ளிடம் அருகே வீடு புகுந்து 33 பவுன் நகைகள், ரூ. 60 ஆயிரம் திருட்டு
கொள்ளிடம் அருகே மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது தஸ்லிம் (42). இவா் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி ஜாஸ்மின் (36) மகன், மகளுடன் மாங்கனாம்பட்டு வீட்டில் வசித்து வருகிறாா். இந்த வீட்டு மாடியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பாா்க்கும் சுதா என்பவா் வாடகைக்கு குடியிருந்து வருகிறாா்.
இந்நிலையில், பக்கத்து தெருவில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஜாஸ்மின் சென்றிருந்தாா். மாடியில் குடியிருந்து வரும் சுதா விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றுவிட்டாா். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள் மாடி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனா். சுதா வசிக்கும் மாடியில் பொருள்கள் ஏதும் சிக்காததால், கீழ் வீட்டுக்கு வந்துள்ளனா். அங்கு, பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
ஜாஸ்மினின் தந்தை ஜலாலுதீன், புதன்கிழமை காலை இந்த வீட்டுக்கு வந்தபோதுதான் திருட்டு சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் ஜாஸ்மின் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
மேலும், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். பின்னா், மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.