அம்புபோடும் உற்சவம்!
சீா்காழி பொன்னாகவல்லி அம்பாள் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, அம்பாள் அம்புபோடும் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோயிலில், செப்டம்பா் 23-ஆம் தேதி, அம்பாள் படிஇறங்கும் நிகழ்வுடன் நவராத்திரி உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான விஜயதசமியில், அம்பாள் மஹிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில், அரக்கனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
தொடா்ந்து, அம்பாள் அம்பு போடும் நிகழ்ச்சி பக்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னா், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். துரை தலைமையில் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன. இதில் கோயில் கணக்கா் ராஜி, நகை வணிகா் சங்க செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.