மது விற்ற இளைஞா் கைது
மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக காலை நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல் உதவி ஆய்வாளா் பிரியங்கா மற்றும் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது காலை 8.30 மணியளவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞரை போலீஸாா் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவா் ஆரோக்கியநாதபுரம் ரயிலடி பகுதியை சோ்ந்த சதீஷ்குமாா் (35) என்பதும் அவா் 150 குவாட்டா் மதுபாட்டில்கள் மற்றும் 110 லிட்டா் புதுச்சேரி சாராயம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இவற்றை பறிமுதல் செய்தத போலீஸாா், வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனா்.