``நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும், ஆனா இந்த ஷோல'' - ட்ரோல் செய்யப்பட்ட கனிக்கு...
பவுனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கம் விலை; இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.165-ம், பவுனுக்கு ரூ.1,320-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
நேற்று மதியம், தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, நேற்று மதியம் முதல், தங்கம் கிராமுக்கு ரூ.11,425 ஆகவும், பவுனுக்கு ரூ.91,400 ஆகவும் விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு ரூ.177-க்கு விற்பனை ஆனது. வெள்ளி நேற்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,260 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.90,080 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.180 ஆகும்.