Bigg Boss Tamil 9: "நல்ல முகமூடி போட்டுருக்காங்க" - கெமி குறித்து விஜே பார்வதி
Nobel Prize: விதிகள் மீறப்படுமா? ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுமா?
இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் 15-க்கும் மேற்பட்ட முறை தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'மீண்டும்... மீண்டும்...' சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அவருக்கு இன்று நோபல் பரிசு அறிவிக்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
விதிமுறை...
ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டுமானால், அவரின் பெயரை ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் பரிந்துரைத்திருந்திருக்க வேண்டும்.
ஆனால், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதே ஜனவரி 20-ம் தேதி தான். அவர் முடித்து வைத்ததாக கூறப்பட்ட போர்கள் ஜனவரி 31-ம் தேதிக்கு பிறகு தான் முடிக்க வைக்கப்பட்டிருக்கிறது.
அதனால், ட்ரம்ப் இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவது பெரும் சந்தேகம் தான். ஒருவேளை, அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டுமானால், அந்தக் கமிட்டியின் மேலே கூறிய விதிமுறை மாற்றப்பட வேண்டும்.
டிசம்பர் மாதத்திலேயே...
கடந்த டிசம்பர் மாதம், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ட்ரம்பின் பெயரை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைத்திருக்கிறார். ஆக, அந்தப் பரிந்துரை இப்போது கணக்கிலெடுக்கப் பட்டிருக்குமா என்கிற கேள்வியும் எழுகிறது.
இன்று ட்ரம்பிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுமா... படாதா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?