Sathish - Deepa Couples: "எத்தனை Dosaதான் சாப்பிடுவீங்க?" | Vikatan Digital Awar...
Bigg Boss Tamil 9: "எங்களை சொல்றதுக்கு நீங்க யாரு?" - மீண்டும் வெடிக்கும் கம்ருதீன், ஆதிரை மோதல்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.10) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் கொடுத்த ‘தண்ணீர் கண்காணிப்பு’ டாஸ்கில் தவறு நடக்க, அதற்குக் காரணம் கம்ருதீன்தான் என்று நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அவரைக் குற்றம்சாட்டி இருந்தனர்.

குறிப்பாக கம்ருதீனுக்கும், ஆதிரை சௌந்தரராஜன் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் மீண்டும் கம்ருதீன், ஆதிரை சௌந்தரராஜன் இருவரும் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
"எனக்கு உங்க கிட்ட பேச இஷ்டம் இல்ல" என்று ஆதிரை சொல்ல " நீங்க பேசுறது சரி இல்ல. வேலைய ஒழுங்க செய்யலனு நீங்க சொல்லாதீங்க. உங்களை உதவிக்கு கூப்டோமோ? நீங்களா தான் வந்து வேலை பண்ணீங்க. இப்போ கொடுத்த வேலையை ஒழுங்கப் பண்ணலன்னு எங்களை சொல்றதுக்கு நீங்க யாரு?" கம்ருதீன் காட்டமாகப் பேசுகிறார்.