செய்திகள் :

``மதராஸி பிளாக்பஸ்டர் ஹிட்" - ஏ.ஆர்.முருகதஸை கலாய்த்த நடிகர் சல்மான் கான்!

post image

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியின் மேடையில் பல சர்ச்சைகள் நிகழ்வதுண்டு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா நடித்த படம் சிக்கந்தர்.

ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.150 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் தோல்விக்கு நடிகர் சல்மான் கான்தான் காரணம் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விமர்சித்திருந்தார்.

ஏ.ஆர் முருகதாஸ்
ஏ.ஆர் முருகதாஸ்

அவர் விமர்சனத்தில், ``நடிகர் சல்மான் கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. எனவே, இரவில்தான் படப்பிடிப்பு நடத்தினோம்.

பகல் காட்சிகளைக் கூட இரவில் நடத்தவேண்டியதாகிவிட்டது. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

மேலும், சல்மான் கான் படப்பிடிப்புக்குக் கூட இரவு 9 மணிக்கு மேல்தான் வருவார். படம் தோல்வியைத் தழுவினாலும் அந்தப் படத்தின் கதை என் மனதுக்கு நெருக்கமானது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில், ஏ.ஆர்.முருகதாஸின் விமர்சனத்துக்கு மறைமுகமாக பதிலளித்திருக்கிறார்.

அவர் பதிலில், ``சிக்கந்தர் படத்தின் தோல்வியை நான் தோல்வி என ஒப்புக்கொள்ளமாட்டேன். சிக்கந்தர் ஒன்லைனாக சிறப்பான கதை. ஆனால், நான் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவேன் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

அதனால்தான் படம் தோல்வியடைந்ததாக கூறியிருக்கிறார். சமீபத்தில் அவரின் மதராஸி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிடுவார்.

அதனால்தான் அந்தப் படம் சிக்கந்தரை விட பிளாக் பஸ்டர் வெற்றி" எனச் சிரித்துக்கொண்டே கலாய்த்திருக்கிறார்.

Dude: "இதை பண்ணாவே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம்" - சாய் அபயங்கர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Dude: "ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா"- நெகிழும் சாய் அபயங்கர் பெற்றோர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Raashi kanna: `என் நிறமற்ற இதயத்தில் வானவில் நீயடி' - ராஷி கன்னா லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

kalyani priyadarshan: `அப்தி அப்தி...' - நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album மேலும் பார்க்க

Dude: 'எதுவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்.!' - உருவக்கேலி குறித்து பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

Dude: "நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லையே"- பிரதீப்பைச் சீண்டிய கேள்வி; சரத்குமாரின் பளீச் பதில் என்ன?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியிருக்கும் படம் டுயூட். இந்தப் படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய வ... மேலும் பார்க்க

``சேது படம் அப்போ அந்த ரெண்டு பேருக்கு ரசிகர்கள் கூடிட்டே இருந்தாங்க; அப்போ விக்ரம் கிட்ட" - அமீர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ், அனுபமா, ரஷிஜா, பசுபதி, லால், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்' திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.இப்படம் தீ... மேலும் பார்க்க