திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவி...
Dude: "இதை பண்ணாவே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம்" - சாய் அபயங்கர்
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.
ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது.
இதில் பேசிய சாய் அபயங்கர், ``'கட்சி சேரா', 'சித்தர புத்திரி', 'ஆசைக் கூட' என ஒரு மூணு பாட்டு நான் இன்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணிருந்தேன்.
அதைப் பார்த்துதான் படங்கள்-ல வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது. நம்ம கிட்ட ஏதோ ஒன்னு புடிச்சுருக்கு, பாட்டை நல்ல டெலிவர் பண்ணிருவோம்னு நம்பி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வராங்க.
அதை நானும் கரெக்ட்டா பண்ணிருக்கேனு நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " நான் ட்விட்டர்லையும், இன்ஸ்டாலையும் பெருசா இல்ல. அப்படி அதுல இல்லாம இருந்தாலே விமர்சனத்துல இருந்து தப்பிச்சிடலாம். நான் அதிகமா ஸ்டூடியோல தான் இருப்பேன்.
எனக்கு பெருசா வெளியலாம் போகப் புடிக்காது. மியூசிக் பண்ணத்தான் புடிக்கும். எனக்கு புடிச்ச மியூசிக்க பண்றேன். மக்களும் அதற்கு சப்போர்ட் பண்றாங்க" என்று கூறியிருக்கிறார்.