`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதிகிஷோர் (15). இந்த சிறுவனை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தெரு நாய் கடித்துள்ளது.
இதனிடையே கடந்த 9-ம் தேதி சிறுவனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூச்சு விடுவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டதால், சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிஷோருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார்கள்.

கடந்த சில நாள்களாக சிறுவனுக்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. நாயின் செயல்பாடுகள் அந்த சிறுவனை தொற்றிக் கொண்டதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கும் சிகிச்சை பலனில்லாமல், உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக கிஷோர் கடந்த 10- தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் நேற்று உயிரிழந்தார். இது சிறுவன் உறவினர்கள், கோவை மக்களிடமும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.