மரணம் குறித்து முன்கூட்டியே உணர முடியுமா? - அறிவியல் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள...
ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.
ஊருக்கு வெளியே கிடை போட்டுப் பராமரித்து வந்த நிலையில், தற்போது மழைக்காலம் என்பதால் ஊருக்குள் உள்ள தனது சொந்த நிலத்தில் கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது.

மழை பெய்த போது முருகன் ஆடுகளை பராமரித்து வந்த இடத்தின் அருகே இருந்த அரிசி ஆலையின் மதில் சுவர் இடிந்து ஆடுகளின் மேல் விழுந்தது.
இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தகவல் அறிந்து வந்த தளவாய்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.