Sundar Pichai: "தென்னிந்திய ரயில் பயணம்; 'AI hub' மிகப்பெரிய முதலீடு" - சுந்தர் ...
Lokah Chapter 1: தீபாவளிக்கு 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ்; வெளியான மோலிவுட் அப்டேட்!
கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.
இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருந்தது. தற்போது 200 கோடிக்கு மேலான வசூலைத் தாண்டிச் சென்று வரவேற்பைப் பெற்றது.

கள்ளியன்காட்டு நீலியாகத் தொடங்கியிருக்கும் இதன் முதல் அத்தியாயத்தின் இறுதியில் துல்கர் சல்மான், டொவினோவின் கதாபாத்திரங்களும் அடுத்தடுத்த பாகத்திற்கான தொடர்ச்சிக் கதைகளுக்கு அடித்தளமிட்டுச் சென்றிருக்கின்றன. மூத்தோனாக மம்மூட்டி நடிப்பதாகவும் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
இதன் இரண்டாம் அத்தியாயத்தில் டொவினோவின் கதையை மையப்படுத்தியதாக இருக்கிறது. 'Lokah Chapter 2' பற்றிய அறிவிப்பு வீடியோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
Queen of the Night — Chandra, from the Lokah Universe. #Lokah coming soon on JioHotstar.#LokahOnJioHotstar#LokahUniverse#ComingSoonOnJioHotstar#YakshiReturns#LokahChapter1#Wayfarerfilms#DulquerSalmaan#DominicArun#KalyaniPriyadarshan#Naslen#Superhero#Lokahthefilmpic.twitter.com/PkHzvLDiwF
— JioHotstar Malayalam (@JioHotstarMal) October 17, 2025
Lokah Chapter 1: Chandra Review: ஒரு டஜன் கேமியோ! மல்லுவுட்டின் புது சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ் எப்படி?
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த ' Lokah Chapter 1' திரைப்படம் ' Jiohotstar' ஓடிடி தளத்தில் அக்டோபர் 19, 20 தேதிகளில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது. கள்ளியன்காட்டு நீலியின் அதிரடி ஆக்ஷனை தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் ஓடிடியில் தீபாவளி ஸ்வீட்டுடன் பார்க்கலாம்