சேலத்தில் களைகட்டும் தீபாவளி பர்சேஸ்; புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வ...
Sundar Pichai: "தென்னிந்திய ரயில் பயணம்; 'AI hub' மிகப்பெரிய முதலீடு" - சுந்தர் பிச்சை சொன்ன விஷயம்
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
கடந்த அக்டோபர் 14ம் தேதி சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீடு கொண்ட இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.
இது இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்றும் இதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறியிருந்தார் சுந்தர் பிச்சை.

இந்நிலையில் சமீபத்தில் 'Salesforce' சேனலுக்குப் பேட்டியளித்திருந்த சுந்தர் பிச்சை விசாகப்பட்டினத்தில் அமையவிருக்கும் 'Google AI hub data centre' குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
'Google AI hub' குறித்துப் பேசியிருக்கும் சுந்தர் பிச்சை, "தென்னிந்தியாவிற்கு ரயில் பயணம் செய்து கடலோரத்தில் இருக்கும் விசாகப்பட்டினத்தின் அழகைப் பார்த்தேன். ரொம்ப அழகான இடம் அது. அங்குதான் 'Google AI hub data centre' அமைக்கப்படும் என்று முடிவெடுத்தோம்.

அமெரிக்காவிற்கு அடுப்படியாக கூகுள் செய்யும் மிகப்பெரிய முதலீடு இந்தியாவில்தான். 'Google AI hub data centre'' $15 Billion, 1 gigawatt+ Data Centre, கடல்வழி கேபிள் இணைப்பு என மிகப்பெரிய அளவில் உருவாகவிருக்கிறது. மாநிலத்தையே பெரிய அளவில் மாற்றும் பெரிய முதலீடு இது. ஆந்திர மாநில முதல்வர், பிரதமருக்கு நன்றி." என்று பேசியிருக்கிறார்.
கூகிள் பிரைன் மற்றும் கூகிள் டீப் மைண்டை ஒன்றாகக் கொண்டு வந்து நாங்கள் கூகுள் 'Gemini ai' ஐ உருவாக்கினோம். இப்போது எங்களிடம் ஜெமினி 2.5 உள்ளது. அடுத்ததாக ஜெமினி 3.0ஐ உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த அப்டேட் வரும். அது மிகவும் அற்புதமாக இருக்கும்.
AI Chatbot ரேஸில் 'OpenAI' நிறுவனம் எங்களுக்கு முன்னாடியே வெளியாகிவிட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது நாங்களும் Chatbot ஒன்றை உருவாக்கிறோம். அதற்கு முதலில் 'OpenAI' நிறுவனதிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்." என்று பேசியிருக்கிறார் சுந்தர் பிச்சை