சேலத்தில் களைகட்டும் தீபாவளி பர்சேஸ்; புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வ...
வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி!
வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் கார்கோ முனையத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சரியாக பிற்பகல் 2:30 மணியளவில் 8-வது கேட் அருகே இந்த தீ விபத்து ஆரம்பித்திருக்கிறது.
#Bangladesh: A massive fire breaks out in the cargo area of Dhaka’s Hazrat Shahjalal International Airport, forcing authorities to suspend all flight operations as firefighters battled to bring the blaze under control.@DhakaPrasarpic.twitter.com/6dZ1mu6Niv
— All India Radio News (@airnewsalerts) October 18, 2025
தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் தல்ஹா பின் ஜாஷிம் கூற்றுப்படி, தீ விபத்து ஏற்பட்ட உடனேயே 9 பிரிவுகளும், அவற்றைத் தொடர்ந்து 15 பிரிவுகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கின.
மொத்தமாக தீயணைப்பு நடவடிக்கையில், வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், தீயணைப்புப் படை மற்றும் விமானப்படையின் இரண்டு தீயணைப்புப் பிரிவுகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டன.
மேலும், விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்காளதேச எல்லைக் காவல்படை (BGB) மற்றும் கடற்படையின் இரண்டு படைப் பிரிவுகள் இந்த நடவடிக்கையில் இணைந்தன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், இந்த தீ விபத்து காரணமாக டாக்கா விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
⚡️BREAKING AND UNUSUAL
— RussiaNews (@mog_russEN) October 18, 2025
A massive fire broke out at Shahjalal Airport in Bangladesh. pic.twitter.com/GVICuSOnH0
வங்காளதேசத்தில் இந்த ஒரு வாரத்தில் நடக்கும் மூன்றாவது மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும்.
கடந்த செவ்வாயன்று ரசாயனக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், சிட்டகாங்கில் உள்ள ஒரு ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலை கட்டிடம் தீ விபத்தில் மொத்தமாக அழிந்தது.