செய்திகள் :

மின்னல் வேகத்தில் பறந்த கார்; கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி

post image

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிட்டு கடந்த 9-தேதி திறந்து வைக்கப்பட்டது.

கோவை அவிநாசி சாலை மேம்பாலம்

கோவையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பாலம் என்பதால், மக்கள் அதில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல வாகனங்கள் கட்டுப்பாடின்றி அதி வேகமாக வாகனங்களை இயக்கி வருவதாகவும் புகார் உள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து, கோல்ட்வின்ஸ் பகுதிக்கு ஒரு கார் சென்றுள்ளது.  மேம்பாலத்தில் அந்த கார் அதிவேகமாக பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாலத்தில் இருந்து வேகமாக இறங்கியும்போது, கட்டுப்படுத்த முடியாமல் சாலையோரம்  நின்றிருந்த லாரி மீது மோதியது.

விபத்தில் சிக்கிய கார்

இதில் காரில்  இருந்த இளம் பெண் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் காரில் பயணித்தவர்கள் இருகூர் பகுதியைச் சேர்ந்த சேக் உசேன், இளம் பெண் மற்றும் இளைஞர் என்று தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் அவர்கள் பயணித்த கார் அப்பளம் போல நொறுங்கியது. இதனால் காவல்துறையினர் நீண்ட முயற்சிக்கு பிறகே காரில் உள்ள உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடைபெற்ற இடம்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வேக கட்டுப்பாடு இல்லாதது, சிசிடிவி வைத்து கண்காணிக்காதது, முறையான தகவல் பலகை இல்லாதது, இரவு நேர போக்குவரத்து பற்றி வெளியான மாறுபட்ட தகவல்கள் ஆகியவை தான் விபத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: பைக் மீது மோதிய லாரி; கணவரின் கண்முன் துடிதுடித்து இறந்த மனைவி; தவிக்கும் பிள்ளைகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான வாகன விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அங்குள்ள பாட்டியானா என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும்(35), அவரது கணவர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு பேருந்து சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வழியாக தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செங்க... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மகள்; வாக்குறுதியை நிறைவேற்ற இறுதிச்சடங்கில் பிறந்தநாள் கேக் வெட்டிய தந்தை

கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரஜித் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் மத்திய பிரதேசத்திற்கு பிக்னிக் சென்று இருந்தார். சென்ற இடத்தில் லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது. இதில் இந்திரஜித் மனைவி மற்று... மேலும் பார்க்க

மும்பை: "ஒரே மகளை இழந்துவிட்டோம்" - 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்து இளம்பெண் பலி

மும்பை மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சன்ஸ்ருதி அமின் (22). இப்பெண் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்று கொண்டிர... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓடும் பேருந்திலிருந்து கழன்று விழுந்த கதவு... அரசு பேருந்தின் அவலநிலை!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. பேருந்தை ஓட்டுநர் ராமு என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளி... மேலும் பார்க்க