கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசா...
வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்
கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இதனால் அங்கு மனித – வனவிலங்கு மோதல் அதிகளவு நடைபெறும். இதில் முதியவர்கள், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் வேவர்லி எஸ்டேட் அருகே காடம்பாடி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்துள்ளது. திடீரென அந்த யானை அங்குள்ள வீட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளது. அந்த வீட்டில் அஞ்சலா (வயது 55) என்கிற மூதாட்டி, அவரின் ஒன்றரை வயது பேத்தி ஹேமாஸ்ரீ உறக்கத்தில் இருந்துள்ளனர்.

யானை அவர்களை தாக்கியத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஞ்சலா பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காயம் தீவிரமாக இருந்ததால் அஞ்சலா சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இந்த சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.