பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - ...
கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவு
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது 41 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களில் இரண்டு பேர் தாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்து மனு தாக்கல் செய்தவர்கள் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கின்றனர்.
நீதிபதிகள் உத்தரவில், ``கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் அனைத்து உண்மையும் வெளிவர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் எங்கள் நீதிபதி ஒருவரை விசாரணையை கண்காணிக்க நாங்கள் நியமித்து இருக்கிறோம். விசாரணை முடியட்டும் யார் செய்தது தவறு என்பது தெரிந்துவிடும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
(More details will be added here)