செய்திகள் :

`வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி’ - கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

post image

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சூழலில் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான நிலத்தில் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட பல பெண்கள் நேற்று மாலை மக்காச்சோளம் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் சுமார் 2.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடி இடித்ததால் அங்கு வேலை செய்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

மாலை சுமார் 4.30 மணிக்கு ஊர்க்காரர்களுக்கு போன் செய்த தவமணி என்ற பெண், `சிவக்குமார் நிலத்தில் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி இடித்தது. அப்போது நாங்கள் மயங்கி விழுந்துவிட்டோம். நான் இப்போதுதான் கண் விழித்தேன். மற்றவர்கள் மயக்கத்திலேயே கிடக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு ஊர்க்காரர்களும், பக்கத்து நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் தவமணி சொன்ன இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போதுப் களையெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நில உரிமையாளர் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, கழுதூர் கிராமத்தை சேர்ந்த கனிதா, பாரிஜாதம், சின்னபொண்ணு என்கிற ராஜேஸ்வரி உள்ளிட்ட நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர்.

 மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

அதையடுத்து தவமணியை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர்கள், வேப்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதேபோல மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கும் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் நான்குபேரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வு சோதனைக்காக திட்டக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தவமணி, `வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி. அவ்வளவு வெளிச்சத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை’ என்று மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார். தவமணியின் நிலை குறித்துப் பேசிய மருத்துவர்கள், `தவமணி தற்போது அதிர்ச்சியில் இருக்கிறார். மின்னல் தாக்கியதில் அவரது கண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை சதவிகிதம் பார்வை திரும்ப வரும் என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது” என்ன்றனர்.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் நிதியுதவித் தொகை அவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.50,000 இறுதிச் சடங்கிற்காக வழங்கினார்.

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட ப... மேலும் பார்க்க

தடுப்புக் கம்பி மீது மோதிய ரயில் எஞ்சின் மின் கருவி; விபத்திலிருந்து தப்பிய ராமேஸ்வரம் ரயில்

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் வழித்தடத்தில் டீசல் எஞ்ஜின் பொறுத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிதடம் மின்சார வழி தடமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மின்சார ரயில் எஞ்சின்களை கொ... மேலும் பார்க்க

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை ... மேலும் பார்க்க

மின்னல் வேகத்தில் பறந்த கார்; கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிட்டு கடந்த 9-தேதி திறந்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: பைக் மீது மோதிய லாரி; கணவரின் கண்முன் துடிதுடித்து இறந்த மனைவி; தவிக்கும் பிள்ளைகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான வாகன விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அங்குள்ள பாட்டியானா என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும்(35), அவரது கணவர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு பேருந்து சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வழியாக தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செங்க... மேலும் பார்க்க