``2026 தேர்தலில் விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சி" - டிடிவி தினகரன் ...
No Marriage: 'கென்ஸ்' இருந்தால் போதும், கணவர் வேண்டாம் - சீனாவில் வைரலாகும் வினோத டிரெண்ட்!
திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது இருக்கும் தலைமுறையினர்கள் தங்கள் சொந்த விருப்பங்களுக்கும், சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சீனாவில் உள்ள வசதி படைத்த பெண்கள், பாரம்பரிய திருமண உறவுகளைத் தவிர்த்து, 'கென்ஸ்' (Kens) எனப்படும் ஆண்களைத் துணைக்கு வைத்துக் கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

யார் இந்த 'கென்ஸ்'?
இந்த 'கென்ஸ்' என்பவர்கள், வீட்டு வேலைகளான சமையல், சுத்தம் செய்தல் போன்றவற்றில் உதவுவது மட்டுமல்லாமல், ஷாப்பிங் செல்வது, உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது என ஒரு துணை செய்யும் பல விஷயங்களை செய்கிறார்கள்.
இவர்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் தொழில்முறை உதவியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் எந்தவிதமான வாக்குவாதங்களும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் இது ஒரு உண்மையான சேவைத் தொழிலாகவே வளர்ந்து வருகிறது. இந்த 'கென்ஸ்' எனப்படும் ஆண்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றத் தயாராக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர் வெளியிட்ட வீடியோ மூலம் இந்த விஷயம் உலகளவில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், "சீனாவில் பெண்ணியம் வேறு ஒரு கட்டத்தில் உள்ளது. பல வசதியான சீனப் பெண்கள் தனிமையில் வாழ விரும்புகிறார்கள். அதனால், அவர்கள் 'கென்' எனப்படும் இளம், அழகான ஆண் உதவியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.