செய்திகள் :

மும்பை ரயிலில் கர்ப்பிணிக்கு வலி, வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்; பயணத்தில் சுகப்பிரசவம்!

post image

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறுவதாக இருந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

இரவு 10 மணிக்கு பிறகுதான் சிறிது கூட்டம் குறையும். அப்படிப்பட்ட ரயிலில் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டால் எப்படி இருக்கும்.

குழந்தை
குழந்தை

மும்பை புறநகரான விரார் பகுதியில் வசிக்கும் அம்பிகா(24) என்ற பெண் கர்ப்பமாக இருந்தார். அவர் பிரசவத்திற்காக விராரில் இருந்து இரவு 11 மணிக்கு பிறகு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு சென்றார்.

ரயில் மும்பை கோரேகாவ் என்ற இடத்தில் வந்த போது அம்பிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் பிரசவ வலியில் துடித்தார். உதவிக்கு அருகில் யாரும் இல்லை. இரவு 11 மணியை தாண்டி இருந்ததால் ரயிலில் பெரிய அளவில் கூட்டமும் இல்லை. ரயிலில் டாக்டர்களும் யாரும் இல்லை.

பிரசவ வலி அதிகரித்ததால் உறவினர்கள் ரயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரயில் ராம் மந்திர் ரயில் நிலையத்தில் நின்றது.

அதே ரயிலில் பயணம் செய்த விகாஷ் அப்பெண்ணிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார். உடனே தனது டாக்டர் தோழி தேவிகா தேஷ்முக்கிற்கு போன் செய்து நிலவரத்தைச் சொன்னார்.

அம்பிகாவுடன் விகாஷ்
அம்பிகாவுடன் விகாஷ்

உடனே டாக்டர் தேவிகா வீடியோ கால் மூலம் அம்பிகாவிற்கு குழந்தை பிறக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். ரயில் நிலையத்தில் உறவினர்கள் மற்றும் சில பெண் பயணிகள் உதவியோடு அம்பிகாவிற்கு பிரசவம் நடந்தது.

பயணி ஒருவர் கொடுத்த கத்திரிக்கோல் மூலம் தொப்புள் கொடி வெட்டப்பட்டது. டாக்டரின் வீடியோ கால் மூலம் அதிகாலை 12.15 மணிக்கு குழந்தை சுகமாகப் பிறந்தது.

அதற்கு உதவிய விகாஷிற்கு அம்பிகாவின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். ரயில் நிலையம் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் மூலம் தாயும், குழந்தையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பிரசவத்திற்கு உதவிய விகாஷ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இது குறித்து விகாஷ் கூறுகையில்,

''நான் விமான நிலையம் செல்வதற்காக கோரேகாவில் இருந்து புறநகர் ரயிலில் ஏறினேன். ரயில் கிளம்பியவுடன் ரயிலில் பெண்ணின் அழுகை குரல் கேட்டது. அவருக்கு யாரும் மருத்துவ உதவிக்கு முன் வரவில்லை. உடனே எனது டாக்டர் தேவிகாவிற்கு போன் செய்து விவரத்தை சொன்னேன்.

அவர் உடனே வீடியோ காலில் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். டாக்டரின் ஆலோசனையில் பயணி ஒருவர் வைத்திருந்த கத்திரியை லைட்டர் மூலம் சூடுபடுத்தி தொப்புல் கொடியை வெட்டினோம்''என்றார்.

பிரசவம்
பிரசவம்

இது குறித்து அம்பிகாவின் உறவினர் மிஸ்ரா கூறுகையில்,'' வலி ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரும்படி நாயர் மருத்துவமனை டாக்டர் தெரிவித்து இருந்தார். இரவில் அம்பிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இரவு 11 மணிக்கு விராரில் இருந்து புறநகர் ரயிலில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். கோரேகாவ் அருகில் சென்ற போது வலி அதிகரித்தது.

அந்த நேரம் விகாஷ் உதவி செய்ததால் சுக பிரசவம் ஏற்பட்டது. அவர் உண்மையில் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றி இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.

விரார் மும்பையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அப்படி இருந்தும் பிரசவ வலி ஏற்பட்ட பிறகுதான் உறவினர்கள் அம்பிகாவை மருத்துவமனைக்கு புறநகர் ரயிலில் அழைத்து வந்தனர்.

Gold: உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை; உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு - எங்கே?

உலகம் முழுவதும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலக தங்கச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூ... மேலும் பார்க்க

ஆன்லைன் ஆர்டர்: 2 ஆண்டுகள் ஏமாற்றி ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்ட நபர் - சிக்கியது எப்படி?

ஜப்பானில் உள்ள பிரபல உணவு டெலிவரி செயலி ஒன்றில், 'ஆர்டர் செய்த உணவு வரவில்லை' எனப் பொய் கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,095 முறை பணத்தைத் திரும்பப் பெற்று, ரூ.21 லட்சம் மதிப்புள்ள உணவை உண்டு ஏம... மேலும் பார்க்க

Arasan Promo : திரையரங்குகளில் திரையிடப்பட்ட `அரசன்' படத்தின் புரோமோ - கொண்டாடிய ரசிகர்கள்!

வெற்றி மாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் `அரசன்' படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. இந்த புரோமோ வீடியோ வெளியிடுவதில் புதிய முயற்சியைக் கையாண்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். ... மேலும் பார்க்க

`பெண்களை துன்புறுத்தினால் எமராஜாவிடம் அனுப்புவோம்'- உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ''எமராஜாவை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பெண்களை ஈவ்டீசிங் அல்லது துன்... மேலும் பார்க்க