‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan...
`பெண்களை துன்புறுத்தினால் எமராஜாவிடம் அனுப்புவோம்'- உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ''எமராஜாவை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பெண்களை ஈவ்டீசிங் அல்லது துன்புறுத்தல் போன்ற காரியத்தில் ஈடுபடுங்கள். இது இரட்டை இன்ஜின்அரசு. பெண்களை யாராவது துன்புறுத்தவேண்டும் என்று நினைத்தால் அடுத்த நிறுத்தத்தில் எமராஜா உங்களுக்காக காத்திருப்பார். யாருக்காவது நரகத்திற்கு செல்ல டிக்கெட் வேண்டும் என்றால் உத்தரப்பிரதேசத்தில் பெண்களை துன்புறுத்துங்கள்.

அதேபோல், யாராவது பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களை சீர்குலைக்க முயன்றால், அவர்களுக்கு சிறை காத்திருக்கும். அரசாங்கம் அவர்களை சிறையில் அடைக்க தயங்காது. கிரிமினல்களுக்கு தலைவணங்கும் முந்தைய அரசு போலல்லாமல் அவர்களுக்கு புரியும் மொழியில் எப்படி பதிலடி கொடுக்கவேண்டும் என்று எங்களுக்கு தெரியும். ஏழைகள் மீது இரக்கம் இல்லாத வீட்டில் கடவுள் வசிப்பதில்லை. ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்கு உதவ வேண்டும். இதுதான் தீபாவளியின் உண்மையான உணர்வு.
முந்தைய அரசுகள் தங்களது சொந்த குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டது. மாநிலத்தைப்பற்றி கவலைப்படவில்லை. வேலை வாய்ப்புகள் விற்பனை செய்யப்பட்டது. எங்கேயும் பாதுகாப்பு இல்லை. சிலிண்டருக்கு கூட மக்கள் காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்கள் இலவச சிலிண்டர் இணைப்புகளை பெற்று இருக்கிறது'' என்று தெரிவித்தார். யோகி ஆதித்யநாத் இன்று முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.