‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan...
Arasan Promo : திரையரங்குகளில் திரையிடப்பட்ட `அரசன்' படத்தின் புரோமோ - கொண்டாடிய ரசிகர்கள்!
வெற்றி மாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் `அரசன்' படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. இந்த புரோமோ வீடியோ வெளியிடுவதில் புதிய முயற்சியைக் கையாண்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.
எப்போதுமே, திரைப்பட வெளியீட்டிற்கு முந்தைய புரோமோ காணொளிகளை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவார்கள்.

ஆனால், இம்முறை திரையரங்கம், யூட்யூப் என இரண்லும் படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இன்று மாலை முதல் `அரசன்' படத்தின் புரோமோ திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தனுஷின் `வடசென்னை' திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடையதாக இப்படத்தின் கதையும் அமைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் வெற்றி மாறன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
சிம்பு, வெற்றிமாறன் என இருவருடனும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
அவர் கம்போஸ் செய்திருக்கும் பின்னணி இசைக்கும் பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று திரைக்கு வந்திருக்கும் புரோமோவைக் காண்பதற்கு நாமும் சென்னை ரோஹினி திரையரங்கத்திற்கு விரைந்தோம்.
இயக்குநர் நெல்சனின் நய்யாண்டி வசனங்கள், நடிகர் தனுஷின் ரெபரென்ஸ் என சிம்பு ரசிகர்கள் அனைவரும் படத்தை ஆர்பரித்துக் கொண்டாடினார்.




