செய்திகள் :

KMH: 'ஹார்ட் வைஸ் க்விஸ் 2025' நிகழ்ச்சி; குழந்தைகளுக்கு இதய ஆரோக்கிய விழிப்புணர்வு

post image

உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 'ஹார்ட் வைஸ் க்விஸ் 2025' நிகழ்ச்சி , அக்டோபர் 12, 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை அரங்கில் சிறப்பாக நிறைவடைந்தது.

இந்த வினாடி வினா போட்டியில் சென்னை முழுவதிலும் இருந்து 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பள்ளி மாணவர்களுக்கு இதய ஆரோக்கியம், சத்துணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். டி.ஜி. சிவரஞ்சனி அவர்கள் அரையிறுதிப் போட்டியாளர்களுடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மூன்று முக்கியமானவை மந்திரங்களை வலியுறுத்தினார் – உணவு, உடற்பயிற்சி மற்றும் உறக்கம். அவர் சமநிலையான உணவு, எளிய வலு பயிற்சிகள் மற்றும் உயிர்சக்கரத்துடன் (சர்க்காடியன் ரிதம்) இணைந்த உறக்கத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு பயனுள்ள குறிப்புகளை பகிர்ந்தார்.

KMH: ஹார்ட் வைஸ் க்விஸ் 2025
KMH: ஹார்ட் வைஸ் க்விஸ் 2025

மேலும், “எங்கள் நோக்கம் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு அப்பாற்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது. நிலைகளுக்கான 24/7 வசதிகளுடன் முழுமையாக தயாராக இருந்தாலும், சமூகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், அவசர நிலைகள் ஏற்படாதவாறு தடுக்க முயல்வதும் எங்களின் கடமையாகக் கருதுகிறோம் என்று கூறினார்.

இதய நிபுணர் டாக்டர் செந்தில் ராஜ் அவர்கள், குழந்தைகளுடன் அன்பான மற்றும் நட்புணர்வான உரையாடலில் ஈடுபட்டு, இதய நலம் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து பயனுள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது

பெரும் இறுதிச்சுற்றில், ஆறு இறுதிப் போட்டியாளர்கள் தங்கள் அறிவு மற்றும் துரிதமான சிந்தனையால் போட்டியிட்டனர். அவர்களின் உற்சாகமும் விழிப்புணர்வும் அனைவரையும் கவர்ந்தது.

வெற்றியாளர்கள்:

  • 1வது பரிசு: நிரிக்னா பீதா – சிவானந்த ராஜாரம் சீனியர் ஸ்கூல் (8ஆம் வகுப்பு)

  • 2வது பரிசு: நவெல்லன் எம்.சிவகுமாரன் – பி.எஸ்.பி.பி.கே.கே.நகர் (7ஆம் வகுப்பு)

  • 3வது பரிசு: ஸ்ரீநந்த் சுரேஷ்குமார் வாரியர் – வேலம்மாள் போதி கேம்பஸ், கொளப்பாக்கம் (8ஆம் வகுப்பு)

வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

KMH: ஹார்ட் வைஸ் க்விஸ் 2025
KMH: ஹார்ட் வைஸ் க்விஸ் 2025

ரன்னர் அப்ஸ்:

  • தக்ஷ் ஏ – வேளம்மாள் போதி கேம்பஸ், கொளப்பாக்கம் (8ஆம் வகுப்பு)

  • ரக்ஷிதா கிருஷ்ணகுமார் – டிப்ஸ், பெருங்குடி (8ஆம் வகுப்பு)

  • ஆரவ் ரமேஷ் – மவுண்ட் லிட்டரா ஜீ ஸ்கூல், ஓ.எம்.ஆர் (5ஆம் வகுப்பு)

அனைத்து இறுதிப் போட்டியாளர்களும் அரை இறுதிப் போட்டியாளர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு சான்றிதழ்களை பெற்றனர். மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனையின் இந்த முயற்சியை பாராட்டி, குழந்தைகளுக்கு இதய ஆரோக்கிய விழிப்புணர்வை உருவாக்கியதற்காக நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டது; பவர்ட் பை: X வினாடி வினா ஐடிமீடியா பார்ட்னர்: நியூஸ் 7 தமிழ்க்கியூரேஷன்: ஜிக்மா

அப்போலோ: 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்; மைல்கல் சாதனை

சென்னை பழைய மகாபலிப்புரம் சாலையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ், ஓ.எம்.ஆர் (Apollo Speciality Hospitals, OMR], 150 நாட்களில் 150-க்கும் மேற்பட்ட ரோபோடிக் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக... மேலும் பார்க்க

இளம் கலைஞர்களின் புதுமையான படைப்புகள்; கோவையில் கண்கவர் ஓவியக் கண்காட்சி | Photo Album

Framed Thoughts: ஓவியக் கண்காட்சி Framed Thoughts: ஓவியக் கண்காட்சி Framed Thoughts: ஓவியக் கண்காட்சி Framed Thoughts: ஓவியக் கண்காட்சி Framed Thoughts: ஓவியக் கண்காட்சி Framed Thoughts: ஓவியக் கண்காட... மேலும் பார்க்க

சர்வதேச சமையல் போட்டி; சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்கள் வென்றனர்

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

காரைக்குடி: சிறப்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன்!

காரைக்குடி கிருஷ்ணா பேட்மிட்டன் அகாடமியில் செக்காலைக்கோட்டை மற்றும் பள்ளத்தூர் நகரத்தார் சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அருண் நெல்லியான் வரவேற்புரை... மேலும் பார்க்க

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பறிமுதல் செய்த `தாவூத் இப்ராகிம் சொத்துகள்' மீண்டும் ஏலம்

மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குக் காரணமான தாவூத் இப்ராகிம் இப்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனை இந்தியாவிற்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும்... மேலும் பார்க்க