Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விள...
"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில்
Qசமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்" என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, "இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என்று அதிமுக - தவெக கூட்டணி குறித்த விவாதத்தைத் திட்டமிட்டு பற்ற வைத்திருக்கிறார்.
நேற்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு நடைபெற்றது. அதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன.
எடப்பாடி பழனிசாமி இப்படி கரூர் சம்பவத்தில் திமுகவை தீவிரமாகத் தாக்கிப் பேசுவது, விஜய்க்கு ஆதராவக் குரல் கொடுப்பது எல்லாம் கூட்டணிக்காகத்தான் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் "விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி, "கரூரில் உயிரிழந்த 41 பேருக்காகத்தான் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் குரல் கொடுக்கிறார். இதில் எந்த அரசியலும் இல்லை. கூட்டணிக்காக யாரிடமும் தவம் கிடக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை.
இப்போது சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுப்பது கரூரில் உயிரிழந்த 41பேருக்கு நியாயம் கிடைக்கம் வேண்டும் என்ற நோக்கத்தில்தான். நாங்கள் கேட்கும் கேள்விகளெல்லாம் மக்கள் மனதில் இருக்கும் கேள்விகள்தான்" என்று பேசியிருக்கிறார்.