இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6
மகளிர் உரிமைத் தொகை: ``புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்"- உதயநிதி சொன்ன அப்டேட்
2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பல்வேறு துறைகள் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பல மகளிர்
இதற்காக விண்ணப்பித்திருக்கின்றனர். அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளீருக்கு இந்த உரிமைத் தொகையினை வழங்கத்திட்டமிட்டிருக்கிறது.

இதுகுறித்து இன்றைய 3ம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறோம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்துள்ளனர். இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.26 ஆயிரம் பெற்றுள்ளனர்.
மேலும் சில பெண்கள் பயனடைவதற்காக மகளிர் உரிமைத்தொகை திட்ட விதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்த்தியுள்ளார். தளர்த்தப்பட்ட விதிகளின்படி, அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் இனி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல, முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான பணிகளை வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. மகளிர் உரிமை தொகைக்காக 28 லட்சம் பெண்கள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த 28 லட்சம் பேரில், தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.” என்று அறிவித்திருக்கிறார்.