செய்திகள் :

கரூர் மரணங்கள்: "தனிநபர் மீது பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை" - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன.

இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விஜய் கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் பிரசாரம் செய்திருக்கிறார். கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது?" என்று கேள்விக் கனைகளைத் தொடுத்து திமுக அரசை விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "காவல்துறை சரியாகச் செயல்பட்டதற்கு சல்யூட் அடித்தார் தவெக தலைவர். செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்" என்று பதிலளித்திருந்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சட்டசபையில் நடந்த காரசார விவாதம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், "கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை.

எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

``கரூர் சம்பவத்தில் விரைவாக உடற்கூராய்வு நடத்தியது ஏன்?'' - இபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் மா.சு பதில்

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன. எதிர்கட்சித் தலைவர் அதிமுக எடப்பாடி ... மேலும் பார்க்க

தீபாவளி விடுமுறை: "தென் மாவட்டங்களுக்கு பகல் நேர முன்பதிவில்லாத மெமு ரயில்கள்" - பயணிகள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குப் பகல் நேர, முன்பதிவில்லாத சேர் கார் வசதி கொண்ட மெமு (Memu) சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தீபாவ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார். இவர் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்துபோன வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும்... மேலும் பார்க்க

சிவகாசி: "மேயர் போட்டோ ஷூட் நடத்துவதில்தான் ஆர்வமாக இருக்கிறார்" - திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் 3 மாதங்களுக்குப் பிறகு மாமன்றக் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் துணை மேயர் பிரியா, ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள்... மேலும் பார்க்க

"சாமானியர்கள் அரசியலுக்கு வந்தால் இதுதான் நிலைமை" - தவெக நிர்மல்குமார் பேட்டி

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ... மேலும் பார்க்க

`நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது

தமிழக வெற்றி கழகத்தின் கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை... மேலும் பார்க்க