சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு; உபரிநீர் திறப்பு |...
`உங்கள் மீது வரி விதிப்பேன்' - பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? - என்ன நடக்கிறது?
அமெரிக்க கருவூல அலுவலகத்தின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருகின்றன. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான தரவு.
அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது. உலகளவில் நிலவும் அரசியல் நிலையற்றத்தன்மை. அதிகரித்து வரும் தங்கம் விலை போன்றவை சில உலக நாடுகள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்பைக் குறைத்து வருவதற்கான காரணமாக இருக்கலாம்.

ஆனால், இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் கருவூலப் பத்திரங்களின் இருப்பைக் குறைப்பதை அமெரிக்கா நிச்சயம் கவனிக்கும்.
பிரிக்ஸ்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே, ட்ரம்ப் பிரிக்ஸ் கூட்டமைப்பை தொடர்ந்து சாடி வருகிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் சுருக்கமே பிரிக்ஸ். உலகில் உள்ள தெற்கு நாடுகளின் கூட்டமைப்பு இது.
இந்தக் கூட்டமைப்பு ஒன்றுசேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுமோ, அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தைக் கொண்டுவருமோ என்கிற சந்தேகங்கள் ட்ரம்பிற்கு எப்போதும் உண்டு.
இந்த நிலையில் தான், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்று நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப்,
"யாருக்காவது பிரிக்ஸ் உடன் இணைய வேண்டுமானால், அது பரவாயில்லை. ஆனால், நாங்கள் உங்கள் மீது அதிக வரி விதிக்கப்போகிறோம்" என்று பிற நாடுகளை எச்சரித்து, 'பிரிக்ஸ் டாலரின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது' என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
ஏன் பிரிக்ஸ் மீது ட்ரம்பிற்கு இவ்வளவு கோபம்?
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுமே உலக அளவில் மிக முக்கியமான மற்றும் கவனிக்கத்தக்க நாடுகள்.
இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சி வேகம் அமெரிக்காவைத் தாண்டியதாக இருக்கிறது. எப்போதுமே ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கு உறவு அவ்வளவு சுமூகமானதாக இருக்காது.

இந்தியா, சீனா, ரஷ்யா செய்கைகள்
சீனா, ரஷ்யா உடன் அமெரிக்கா எப்போதுமே முட்டி மோதிக்கொண்டிருந்தாலும், இந்தப் பட்டியலில் இந்தியா சமீபத்தில் இணைந்துள்ளது. அதற்கு காரணம் வரி.
இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, சீனாவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடுகள் இருந்தது.
அடுத்ததாக, ட்ரம்ப் எவ்வளவோ எச்சரித்தும் இன்னமும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து தான் எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது.
சீனா
சீனா சமீபத்தில் அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா வரிகளையும், தடைகளையும் விதிக்க தொடங்க, மெல்ல சீனாவும் எதிர்வினையாற்ற தொடங்கியிருக்கிறது.
ரஷ்யா
'என்னுடைய நண்பர் தான்; அதிபராக பதவியேற்றதும் விரைவில் போர் நிறுத்தம் செய்துவிடுவேன்' என்று புதினை நம்பி முன்பு ட்ரம்ப் பேசி வந்தார். இப்போது வரை, புதின் அதற்கு உடன்படவில்லை. ட்ரம்பின் அதிரடிகளுக்கு ரஷ்யா பணியவும் இல்லை.

பிரேசில்
ரஷ்யா உடனான வர்த்தகத்தினால் இந்தியா, பிரேசில் மீது 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்துள்ளது. இது ரஷ்யா உடனான வர்த்தகத்தைக் குறைக்கும் என்று அமெரிக்கா பார்த்தால், இப்போது இந்தியாவும், பிரேசிலும் கூட்டு சேர்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திட பார்த்து வருகிறது.
இவை எல்லாமே செய்வது பிரிக்ஸ் நாடுகள் தான். அதனால், பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் நிச்சயம் அடுத்த நகர்வை எடுத்து வைக்கலாம்.