சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு; உபரிநீர் திறப்பு |...
சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262
குழந்தை பிறந்த பிறகு எத்தனை நாள் அல்லது எத்தனை வாரம் அல்லது எத்தனை மாதம் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதிலை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

''இது முதலில் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. உறவுகொள்வது நல்லதுதான். செய்யாமல் இருந்தாலும் கெடுதல் இல்லை'' என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
''சிசேரியனோ அல்லது நார்மல் டெலிவரியோ, பெண்ணுறுப்பில் காயங்கள் ஆறுவதற்கும், அறுவை செய்த காயம் ஆறுவதற்கும், பெண்ணுறுப்பு இயல்பான அளவுக்கு வருவது வரைக்கும் உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. இதற்கு ஒன்றரை மாதம், அதாவது, 6 வாரங்கள் இடைவெளிவிட வேண்டும். அதன்பிறகு, வழக்கம்போல தாம்பத்திய உறவில் இயல்பாக ஈடுபடலாம். ஒருவேளை பெண் களைத்துப் போயிருந்தாலோ அல்லது உடல் பலவீனமாக இருந்தாலோ அல்லது மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலோ தவிர்த்து விட வேண்டும். பயந்து போய் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை.
இன்னொரு முக்கியமான விஷயம், தாம்பத்திய உறவு என்றாலே பெனிட்ரேட் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரல் செக்ஸ், பரஸ்பரம் சுய இன்பம் செய்துகொள்வது என்றும் இருக்கலாம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, இது சம்பந்தப்பட்ட கணவன், மனைவியின் மனநிலையைப் பொறுத்தது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.