திருமாவளவன்: "என் கார் மோதவில்லை; அவதூறு பரப்புகிறார்கள்!" - சாலை தகராறுக்கு விள...
கணவன், மனைவி இருவருக்குமே உதவும் வைப்ரேட்டர் காண்டம்! - காமத்துக்கு மரியாதை 261
''கர்ப்பமாவதை தடுப்பதற்கும், பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கும் மட்டுமே காண்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? இல்லவே இல்லை.
இப்போது விறைப்புத்தன்மைக்காகவும், இன்பத்துக்காகவும்கூட காண்டம் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

''சுருள் சுருளான வடிவில் இன்ஸ்பைரல் காண்டம் (Inspiral condom), புள்ளிகள் வைத்த டாட்டட் காண்டம் (Dotted condom), சாப்பிடக்கூடிய எடிபிள் காண்டம் (Edible condom) போன்ற பல வகை காண்டம்கள், கண்ணைக் கவரும் பளிச் நிறங்களில் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. இவற்றில் வைப்ரேட்டர் காண்டம் (Vibrator condom) இரண்டு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வைப்ரேட்டர் காண்டமில் ஒரு ரிங் மாட்டப்பட்டு இருக்கும். அதன் மீது சின்னதாக ஒரு வைப்ரேட்டர் இருக்கும். இந்த வைப்ரேட்டர் பெண்களுடைய க்ளைட்டோரியஸை தூண்டி உச்சக்கட்டத்துக்குக் கொண்டு போகும். இதே காண்டமை வைப்ரேட்டர் கீழ்ப்பகுதியில் இருப்பதுபோல அணிந்தால், விந்து வராதவர்களுக்கு விந்து வரும். விறைப்புத்தன்மை குறைவாக இருக்கிற ஆண்கள் வைப்ரேட்டருடன் கூடிய காண்டம் அணிந்தால், தேவையான விறைப்புத் தன்மையையும் பெறலாம்.
தவிர, எந்த காண்டம் என்றாலும் தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். கட்டாயம் காலாவதி ஆகியிருக்கக் கூடாது. காலாவதியானது பயன்படுத்துகையில் கிழிந்துவிடலாம். நூறு பேரில் 2 அல்லது 3 பேருக்கு இப்படி நிகழ்வதாகத் தெரிகிறது. ஆணுறைகளைக் கழுவி விட்டு மறுபடியும் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் செய்யவே கூடாது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.