செய்திகள் :

டாப் 5 மிக குறைந்த விலை, அதிக மைலேஜ் பைக்குகள்!| Top 5 Affordable Commuter Bikes!

post image

வரும் தீபாவளிக்குள் அல்லது புது வருடத்திற்குள் ஒரு புதிய பைக் வாங்கணும், ஆனால் பட்ஜெட்டுக்குள் இருக்கணுமா?

GST வரி மாற்றத்துக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள சில பிரபல கம்யூட்டர் பைக்குகளின் விலை இன்னும் குறைந்திருக்கிறது. அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு, நல்ல தரம் உங்களோடு செக் லிஸ்டா? உங்களுக்கான டாப் 5 அதிக மைலேஜ், குறைந்த விலை பைக்குகளின் பட்டியல் இது! Top 5 Affordable Commuter Bikes!

5. பஜாஜ் பிளாட்டினா | Bajaj Platina 100 - ₹65,407 | ARAI Mileage: 70 kmpl

Bajaj Platina 100

Bajaj Platina 100 என்ற பெயரை எல்லாரும் அறிவார்கள்! இப்போது விலை ₹65,407-க்கு குறைந்துள்ளது (GST குறைப்புக் காரணமாக). 102cc air-cooled engine உடன் வரும் இந்த பைக், 7.9hp பவர் மற்றும் 8.3Nm டார்க் வழங்குகிறது. ARAI மைலேஜ் லிட்டருக்கு 70 கி.மீ. மென்மையான சஸ்பென்ஷன், கம்ஃபர்டபிள் சீட், ரோபஸ்ட் பில்ட் - இதனாலே இது சிட்டி ரைடுக்கும், கிராமப்புற பயணத்துக்கும் சரியாகப் பொருந்துகிறது.

4. ஹோண்டா ஷைன் | Honda Shine 100 - ₹63,191 | ARAI Mileage: 65 kmpl

Honda Shine 100

Honda Shine 100 என்பது ஹோண்டாவின் மிகச் குறைத்த விலை பைக். இது 98.98cc இன்ஜின் உடன் வருகிறது - 7.38hp பவர், 8.04Nm டார்க் வழங்குகிறது. ARAI மைலேஜ் லிட்டருக்கு 65 கி.மீ. சிட்டி யூஸ்க்கு ஏற்ற மாதிரி மென்மையான ரைடு, நல்ல மைலேஜ், மற்றும் ஹோண்டாவின் தரம் இதிலே தெரிகிறது. மேலும், Shine 100 DX என்ற புதிய வேரியண்ட் stylish டிசைனுடன் வந்துள்ளது - அழகும், பயனும் சேர்ந்து தேடும் பயனர்களுக்கு சரியான தேர்வு.

3. ஹீரோ எச்எஃப் 100 | Hero HF 100 - ₹58,739 | ARAI Mileage: 70 kmpl

Hero HF 100

Hero-வின் நம்பிக்கைக்குரிய இன்ஜின் தொழில்நுட்பத்துடன் வரும் HF 100, 97.2cc இன்ஜின் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. ARAI மைலேஜ் லிட்டருக்கு 70 கி.மீ. மிகச் சாதாரண, எளிமையான, ஆனால் வலுவான கம்யூட்டர் பைக் இது. தினசரி பயணத்துக்கு பொருத்தமானது, பராமரிப்பு செலவு குறைவு - Hero-வின் நீண்டநாள் நம்பிக்கை இதிலேயே தெரிகிறது.

2. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் | Hero HF Deluxe (All Black) - ₹55,992 | ARAI Mileage: 70 kmpl

Hero HF Deluxe

Hero HF Deluxe எப்போதும் கம்யூட்டர் பைக் வாங்குபவர்களிடையே பிரபலமானது. All Black variant தற்போது பெரிய விலை குறைப்புடன் ₹56,000க்குக் கீழ் கிடைக்கிறது. இது 97.2cc air-cooled இன்ஜின் மற்றும் 7.9hp பவர்  8.05Nm டார்க் உடன் வருகிறது. இதே இன்ஜின் Splendor-லிலும் உள்ளது. ARAI மைலேஜ் லிட்டருக்கு 70 கி.மீ. சிம்பிளான டிசைன், மென்மையான ரைடு, நம்பத்தகுந்த செயல்திறன் - இதனால் HF Deluxe இன்னும் ஒரு சிறந்த தேர்வு.

1. டிவிஎஸ் ஸ்போர்ட் ES | TVS Sport ES - ₹55,100 | ARAI Mileage: 80 kmpl

TVS Sport ES

இப்போது இந்தியாவின் மிகக் குறைந்த விலை பைக் இதுதான்!
TVS Sport ES-ல் இருக்கும் 109.7cc fuel-injected இன்ஜின் 8.3hp பவர், 8.7Nm டார்க் வழங்குகிறது. ARAI மைலேஜ் லிட்டருக்கு 80 கி.மீ. முன்பு இது 100cc-ஆக இருந்தாலும், BS6 மேம்பாட்டுக்கு பிறகு இன்னும் மென்மையான, நம்பிக்கையளிக்கும் கம்யூட்டர் பைக்காக மாறியது. எளிதாக ஓட்ட முடியும், நல்ல மைலேஜ் தரும் - தினசரி ஆபீஸ் பயணம் அல்லது குறுகிய ட்ரிப்‌க்கு சரியான தேர்வு.

Royal Enfield: ஹன்ட்டர் முதல் மீட்டியார்; ரூ.20,000 வரை விலை குறைந்த பைக்குகள் - விவரங்கள் உள்ளே

மத்திய அரசின் ஜி.எஸ்.டி 2.0 வரி சீர்த்திருத்தத்துக்குப் பிறகு வாகனங்களின் விலை பெருமளவில் சரிந்துள்ளது. 350 சிசிக்கு குறைவான பைக்குகளுக்கான வரி 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள... மேலும் பார்க்க