செய்திகள் :

"கரூர் விபத்து; ஒருவரை மட்டும் கைகாட்டி குற்றம் சுமத்த முடியாது" - காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி

post image

கரூரில் தவெக விஜய் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலால் 41 பேர் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. தமிழக காவல்துறை அஸ்ரா கார்க் தலைமையில் 'SIT' அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சினிமா வட்டாரங்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர்.

கரூர் விஜய் பிரசாரம்

அவ்வகையில் 'காந்தாரா' இயக்குநர் ரிஷப் ஷெட்டி NDTV செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் கரூர் சம்பவம் குறித்தும், ரசிகர்களின் கூட்டம் குறித்தும் பேசியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் ரிஷப் ஷெட்டி, "ஒரு ஹீரோவையோ அல்லது அவரது கதாபாத்திரத்தையோ நாம் விரும்பும் போதுதான் கதாநாயக வழிபாடு ஏற்படுகிறது. கதாநாயக வழிபாடுகளை தவிர்ப்பது நல்லது.

கரூர் கூட்ட நெரிசல் விஷயத்தில் நான் ஏதும் கருத்து சொல்ல முடியாது. இருப்பினும் அங்கு நடந்தது விபத்து என்றுதான் கூற முடியும். அவ்வளவு ரசிர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது முடியாத காரியம். அந்த நேரத்தில் யாராலும் ஒன்றும் செய்திருக்க முடியாது.

ரிஷப் ஷெட்டி |Rishabh Shetty kantara
ரிஷப் ஷெட்டி |Rishabh Shetty kantara

திடீரென கூடும் இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்? காவல்துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறுவது மிகவும் எளிதானது, ஆனால் சில சமயங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் அவர்களுக்கும் பல சிக்கல் உள்ளது.

இந்த விஷயத்தில் எல்லோரும் மீதும் தவறு இருக்கிறது. ஒருவரை மட்டும் கைகாட்டி குற்றம் சுமத்த முடியாது. எல்லோரும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும். அதனால்தான் இதை விபத்து என்று கூறிகிறேன்." என்று பேசியிருக்கிறார்.

Big Boss 12: பிக் பாஸ் வீட்டுக்கு சீல்; பிக்பாஸுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் கர்நாடகா அரசு

கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், சுற்... மேலும் பார்க்க

காந்தாரா: "எங்கள் உணர்வைப் புண்படுத்தாதீர்கள்" - வேஷம்போடும் ரசிகர்களுக்கு ரிஷப் கோரிக்கை

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் தெய்வத்தைப் (Daiva) போல உடையணிந்து வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட... மேலும் பார்க்க

Kantara-1: ``எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவம்" -ஆடை வடிவமைப்பு குறித்து பிரகதி ஷெட்டி நெகிழ்ச்சி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்... மேலும் பார்க்க

காந்தாரா: "படம் பார்த்த அமெரிக்கர்கள், 'இது எங்க கதை' என்று சொன்னார்கள்" - இயக்குநர் ரிஷப் ஷெட்டி

2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடு தழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஈஸ்வர பூந்தோட்டம... மேலும் பார்க்க

"நம்பிக்கையுடைய தோழியாக இருந்ததற்கு நன்றி"- ருக்மினி வசந்த் நெகிழ்ச்சி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்... மேலும் பார்க்க

Kantara-1: `கனகவதி' ருக்மினி வசந்த்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album

ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த் மேலும் பார்க்க