செய்திகள் :

Aus vs Ind: "ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது பிடிக்கும்; காரணம்" - ரோஹித் சர்மா

post image

வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கும் ரோஹித் சர்மா, கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021ம் ஆண்டு முதல் கேப்டனாகச் செயல்படும் ரோஹித் சர்மாவின் இடத்தை சுப்மன் கில்லைக் கொண்டு நிரப்பியிருக்கிறது பிசிசிஐ. ஷ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகச் செயல்படுகிறார். டி 20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் மற்றும் ரோஹித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கில் - கம்பீர்
கில் - கம்பீர்

கடந்த மார்ச் மாதம்தான் ரோஹித் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்த நிலையில் அவரிடமிருந்து கேப்டன்ஸி பொறுப்பு பறிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முடிவுக்குப் பிறகு முதல்முறையாக இதுகுறித்து பேசியிருக்கிறார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியாவில் விளையாடுவது தனக்கு விருப்பமானது எனக் கூறி, போட்டியில் கலந்துகொள்வது பற்றி ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா.

"எனக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது பிடிக்கும். அங்குச் செல்வதை விரும்புவேன். ஆஸ்திரேலிய மக்கள் கிரிக்கெட்டை அதிகம் நேசிப்பவர்கள்" என மும்பையில் நடந்த CEAT கிரிக்கெட் மதிப்பீட்டு விருதுகள் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் ரோஹித்.

விராட் கோலி- ரோஹித்
விராட் கோலி- ரோஹித்

2027 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா?

கேப்டன்சி மாற்றம் குறித்து ரோஹித்துக்கு ஏற்கெனவே தெரியப்படுத்திவிட்டதாகக் கூறியுள்ளார் பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர். ஆனால் 2027 உலகக்கோப்பையில் விராட் மற்றும் ரோஹித் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் சென்றார்.

"ரோஹித், கோலி விளையாடும் ஃபார்மெட் இதுதான். அணியில் இருக்க தேவையான அனைத்து விஷயங்களையும் அவர்கள் பூர்த்தி செய்துள்ளனர். 2027 ஒருநாள் உலகக் கோப்பை வெகு தொலைவில் உள்ளது. இப்போது அதைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இதுவொரு கேப்டன்சி மாற்றம்.

அதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன. நடைமுறையில் மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது சாத்தியமற்றது. அடுத்து வரும் உலகக் கோப்பையை நீங்கள் பார்க்க வேண்டும். இப்போது மிகக் குறைவாக ஆடப்படும் ஃபார்மெட் இதுதான் (ODI)...

கவுதம் கம்பீர், அஜித் அகர்கர்

இப்போதோ அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகோ எடுக்க வேண்டிய முடிவு இது. மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல், பயிற்சியாளர்களுக்கும் கடினம்தான்" எனக் கூறியிருந்தார் அகர்கர்.

"விராட், ரோஹித், அஸ்வின் ஓய்வுபெற" - கம்பீரம் மீது முன்னாள் வீரரின் பகீர் குற்றச்சாட்டு!

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வை அறிவிக்க தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் காரணம் எனக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி. இந்த ஆண்டின... மேலும் பார்க்க

Bumrah: "அணியின் முதுகெலும்பு பும்ரா; ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" - பணிச்சுமை குறித்து சிராஜ்

இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸின்போது ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.காயம் காரணமாக இரண்ட... மேலும் பார்க்க

siraj: "ஒரு மேட்ச்சில் ஹீரோ, அடுத்ததில் ஜீரோ" - தோனி சொன்ன அந்த அட்வைஸ்!

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சர்வதேசப்போட்டிகளில் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில் தோனி வழங்கிய குட்டி அறிவுரை, எப்படி அவர் வெற்றியிலும் தோல்வியிலும், அதிக விமசர்சனங்களையும் பாராட்டுகளையு... மேலும் பார்க்க

IND vs PAK: கைகொடுக்காமல் வந்த ஹர்மன்பிரீத்; இடையில் நிறுத்தப்பட்ட போட்டி - வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த ஆண்களுக்கான ஆசியக் கோப்பையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியின்போது கேப்டன்கள் கை கொடுத்து... மேலும் பார்க்க

சுப்மன் கில்லுக்கு கொடுக்கும் 'அதீத' அங்கீகாரம் - சில கேள்விகள்

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வருகின்ற 19ம் தேதி தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்துக்கான அணி நேற்று (அக்டோபர் 4) அறிவிக்கப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனா... மேலும் பார்க்க

``எனக்கு ஒருபோதும் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை" - தோனி குறித்து வருந்தும் சூர்யகுமார் யாதவ்

2024-ல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோலி, அக்சர் படேலின் பேட்டிங், பும்ரா, ஹர்திக்கின் பவுலிங் என இந்தியாவின் வெற்றிக்கு அத்தனை காரணிகள் இருந்தாலும், 2007-ல் ஸ்ரீசாந்த் செய்ததைப் போல கடைசி நொ... மேலும் பார்க்க