TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து - நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க ம...
கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். குடும்பத்தினரின் இழப்புக்கு ஆறுதல் கூறியதுடன், விஜய் தனிப்பட்ட முறையில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
இந்தநிலையில் அடுத்தகட்டமாக விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், "கரூர் வந்து மக்களைச் சந்திக்க அனுமதி கேட்டு டிஜிபியை நேற்றிரவு இமெயில் மூலம் அணுகியுள்ளனர். இன்று நேரில் வந்து கொடுக்கவுள்ளனர்.
இன்னொருமுறை இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பது யாருக்கும் நல்லது இல்லை. அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் சந்திக்க என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை விவாதிக்க ஒரு சந்திப்பைக் கேட்டிருக்கிறோம்.

தலைவர் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் 33 பேரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். 'என்ன ஆறுதல் சொன்னாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது, நான் உங்களுடன் இருப்பேன். நான் உங்களை விரைவில் நேரில் சந்திப்பேன்' எனக் கூறியுள்ளார். கரூர் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்ந்து பேசவிருக்கிறார்.
பேசிய மக்கள் எல்லோருமே 'நீங்க தைரியமா இருங்க, தொடர்ந்து முயற்சி பண்ணுங்க' என்றே கூறினர்." எனத் தெரிவித்துள்ளார்.