செய்திகள் :

காந்தாரா: "படம் பார்த்த அமெரிக்கர்கள், 'இது எங்க கதை' என்று சொன்னார்கள்" - இயக்குநர் ரிஷப் ஷெட்டி

post image

2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடு தழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தையும், தனது மக்களையும் காக்க அரச வம்சத்தினரை எதிர்த்தும், அரக்க சக்தியை எதிர்த்தும் நாயகன் போராடுவதும், குலங்களுக்கும் அரசுக்குமான போரும், அவர்களின் தெய்வ வழிபாடும்தான் இதன் கதைக்களம்.

Kantara Chapter 1
Kantara Chapter 1

Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2' தனித்து நிற்பது எங்கே?

இப்படத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அமெரிக்காவிலிருந்து வந்த பாராட்டுதான் தனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக NDTVக்கு வழங்கிய நேர்காணலில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் ரிஷப் ஷெட்டி, "நம் நாட்டு கலாசாரத்தையும், இங்கு நடந்த பழங்கால கதை, தெய்வ வழிபாடு, அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடந்த ஒடுக்குமுறைகள், அதற்கெதிரான கிளர்ச்சிகள் ஆகியவற்றை காந்தாரா படத்தில் எடுத்திருந்தோம். ஆனால் அமெரிக்காவில் இப்படத்தைப் பார்த்துவிட்டு, இது எங்கள் கதை என்று என்னிடம் கூறியினார்கள்.

எனக்கும் ஒன்றுமே புரியவில்லை. பூர்வகுடி அமெரிக்கர்களுக்கும், அப்போது இருந்து அமெரிக்க அரசுக்குமிடையே நடந்த ஒடுக்குமுறைகளை காந்தாரா படத்தின் கதையின் சாராம்சத்தில் உணர்ந்ததாக அமெரிக்காவில் பலர் என்னிடம் எடுத்துச் சொல்லிப் பாராட்டினார்கள். இதுவரை எனக்குக் கிடைத்தப் பாராட்டில் இது ரொம்பவும் புதுசாக இருந்தது.

காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி
காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி

இங்கு இருக்கும் பிற மாநிலத்தவர்கள் இந்தக் கதையைப் புரிந்துகொள்வார்களா என்று சந்தேகப்பட்டிருக்கிறேன். ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இதைத் தங்கள் கதை என்று புரிந்துகொள்ளும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்துச்சு. எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Kantara-1: ``எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவம்" -ஆடை வடிவமைப்பு குறித்து பிரகதி ஷெட்டி நெகிழ்ச்சி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்... மேலும் பார்க்க

"நம்பிக்கையுடைய தோழியாக இருந்ததற்கு நன்றி"- ருக்மினி வசந்த் நெகிழ்ச்சி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்... மேலும் பார்க்க

Kantara-1: `கனகவதி' ருக்மினி வசந்த்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album

ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த்ருக்மினி வசந்த் மேலும் பார்க்க

Kantara: "இசைதான் இந்த படத்தின் ஆன்மா" - அஜனீஷை வாழ்த்திய இசையமைப்பாளர்கள்!

காந்தாரா தி லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. கன்னட திரையுலகைக் கடந்து தமிழ் மற்றும் இந்தியிலும் வெற்றிநடை போடுகிறது. காந்தாரா என்ற பகுதியில் வசிக்கும் பழங்... மேலும் பார்க்க

Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள்

கன்னட சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக பேசு பொருளாக மாறி நிற்கிற பெயர், ரிஷப் ஷெட்டி. நடிகர், இயக்குநர் என இருபக்கமும் சிறப்பாக திகழ்ந்து வருகிறார். அவருடைய படங்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்புதான் இது... மேலும் பார்க்க

"நான் கன்னட நடிகர் மட்டுமல்ல, பிரிவினை வேண்டாம்" - காந்தாரா நடிகர் ரசிகருக்குச் சொன்ன பதில்!

2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஈஸ்வர பூந்தோட்டமா... மேலும் பார்க்க